Posts

2025 - அம்மா பிறந்த நாள் வாழ்த்து

அன்பின் அடைமொழியே! பண்பின் பிரதிபலிப்பே! என் வாழ்வின் வழிகாட்டியே! எனை ஈன்ற என் தாயே! தாவரவியல் உனது பணி, இனிய புன்னகை உனது அணி, தினமும் மலரும் உன் பாசம் தனி, சிறக்கும் என்றும் உன் வாழ்வும் இனி! எழுபது வருடம் மலர்ந்திட, என்றும் நீ  நலம்வாழ்ந்து விளங்கிட. மழைப்போல் உன் அன்பை பொழிந்திட, வாழ்த்தும் வயதில்லை வணங்கினேன் அன்போடு.                                 புலவர் மைந்தன்

2025 - பிறந்த நாள் வாழ்த்து

என்னை இயக்கிடும் இயமானியே, என் உள்ளே ஒளிர்ந்திடும் ஊழ்த்துணையே, என்றும் அன்புடை விருத்தனையே, அன்பின் மறுவுரு மணவாளி, கோடியில் பூத்த கோமகளே, வையகம் வந்துற்ற நாள் இதிலே, வரும் ஆண்டதை ஆண்டிட வாழ்த்துகிறேன்!                               புலவர் மைந்தன்

பதிமூன்று ஆண்டு மணநாள் வாழ்த்துக்கள்

அன்பிற்கு ஒரு இலக்கணம் உண்டோ! அன்பிற்கு ஒரு இலக்கணம் உண்டோ! இருந்திருந்தால் உன் அன்பு அதனை தினமும் மறுசீரமைப்பு செய்திருக்கும். பதிமூன்று ஆண்டுகள் ஆனாய் என் துணை என் மனை என் இணை இவ்விணை என்றும் பிரியாம். தினமும் மலரும்  மேலும் வளரும்  அன்பின் மிகுதியால்  வாழ்த்தினேன் உன்னை,  இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.         - புலவர் மைந்தன்

அம்மா பிறந்தநாள் கவிதை

ஆயிரம் விடுமுறை வந்தாலும் அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறையில்லை அம்மா! அன்பாய் எடுத்துரைத்து, பக்குவமாய் கடிந்துரைத்து, உரிமையாய் அறிவுரைத்து, அன்பின் வழியே உன் வழி! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா!

வானவில்லே வணங்கிடும் நிறங்கள்!

வானவில்லே வணங்கிடும் நிறங்கள்! எண்ணங்கள்தோறும் வண்ணங்கள் கொண்டவளே, வண்ணங்கள்தோறும் நம் நண்ணங்கள் கொண்டவளே, உன் துணங்கள் முதல் எங்கள் மனங்கள் வரை உன் வண்ணங்களே, என் மனையாளே மந்திரவாதியை, அன்பின் நீட்சியே, அழகிய மகிழியே, நகிழிய நண்பியே, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.

பத்தாத பத்து

மே திங்கள் விதைத்த நம் காதல், அன்பின்பால் வேரூன்றி, பல இள,.முதுவேனில், கார் கூதிர் முன்,. பின்பனி தாண்டி, இரு கிளை தந்து இன்றும் பசுமையாய்., உன்குரலில் என் பெயர், உன்விழியில் என் நிழல், உன்விரல்களில் என் விரல், உன்அருகில் என்றும் நான்., காலையில் காபி, மாடியில் மாலை, வார இறுதி கடைவலம், உந்துஉருளி ஊர்வலம், திகட்டிடும் நினைவுகள் மிதந்திடும் பல்லாண்டு,. அட ஊடல் கூட ஒரு கவிதைதான் அது ரசிப்பவர்களுக்கே புரிந்திடும் என்றும் கூடலில் அது கரைந்திடும் அங்கு காதல் மீண்டும் உயிர்பெறும், உன்னோடு ஒன்றாய், ரெண்டோடு நன்றாய், என்றென்றும் அன்பாய், இது பத்தாத பத்தாய் தொடர்ந்திடும்.. பத்தாம் ஆண்டு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..

பிறந்த நாள் வாழ்த்து - 27-08-2021

மணந்த என் வாழ்விலே மணம் தரும் காந்தளே, கணக்கும் எப்பொழுதுமே தோள் தரும் துணைவியே, கலங்கிய பொழுதில் நீ கலங்கரை விளக்கமே, அழகிய சிரிப்பிலே விளங்கிடும் விருந்தோம்பலே, நீ பிறந்த இன்னாளிலே வாழ்த்திடும் ஏழுலகுமே!