பத்தாத பத்து

மே திங்கள் விதைத்த நம் காதல்,
அன்பின்பால் வேரூன்றி,
பல இள,.முதுவேனில்,
கார் கூதிர் முன்,. பின்பனி தாண்டி,
இரு கிளை தந்து இன்றும் பசுமையாய்.,

உன்குரலில் என் பெயர்,
உன்விழியில் என் நிழல்,
உன்விரல்களில் என் விரல்,
உன்அருகில் என்றும் நான்.,
காலையில் காபி,
மாடியில் மாலை,
வார இறுதி கடைவலம்,
உந்துஉருளி ஊர்வலம்,
திகட்டிடும் நினைவுகள் மிதந்திடும் பல்லாண்டு,.

அட ஊடல் கூட ஒரு கவிதைதான் அது ரசிப்பவர்களுக்கே புரிந்திடும் என்றும் கூடலில் அது கரைந்திடும் அங்கு காதல் மீண்டும் உயிர்பெறும்,

உன்னோடு ஒன்றாய்,
ரெண்டோடு நன்றாய்,
என்றென்றும் அன்பாய்,
இது
பத்தாத பத்தாய் தொடர்ந்திடும்..

பத்தாம் ஆண்டு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..

Comments

Popular posts from this blog

பதிமூன்று ஆண்டு மணநாள் வாழ்த்துக்கள்

2025 - அம்மா பிறந்த நாள் வாழ்த்து

வானவில்லே வணங்கிடும் நிறங்கள்!