அன்பிற்கு ஒரு இலக்கணம் உண்டோ! அன்பிற்கு ஒரு இலக்கணம் உண்டோ! இருந்திருந்தால் உன் அன்பு அதனை தினமும் மறுசீரமைப்பு செய்திருக்கும். பதிமூன்று ஆண்டுகள் ஆனாய் என் துணை என் மனை என் இணை இவ்விணை என்றும் பிரியாம். தினமும் மலரும் மேலும் வளரும் அன்பின் மிகுதியால் வாழ்த்தினேன் உன்னை, இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். - புலவர் மைந்தன்
அன்பின் அடைமொழியே! பண்பின் பிரதிபலிப்பே! என் வாழ்வின் வழிகாட்டியே! எனை ஈன்ற என் தாயே! தாவரவியல் உனது பணி, இனிய புன்னகை உனது அணி, தினமும் மலரும் உன் பாசம் தனி, சிறக்கும் என்றும் உன் வாழ்வும் இனி! எழுபது வருடம் மலர்ந்திட, என்றும் நீ நலம்வாழ்ந்து விளங்கிட. மழைப்போல் உன் அன்பை பொழிந்திட, வாழ்த்தும் வயதில்லை வணங்கினேன் அன்போடு. புலவர் மைந்தன்
வானவில்லே வணங்கிடும் நிறங்கள்! எண்ணங்கள்தோறும் வண்ணங்கள் கொண்டவளே, வண்ணங்கள்தோறும் நம் நண்ணங்கள் கொண்டவளே, உன் துணங்கள் முதல் எங்கள் மனங்கள் வரை உன் வண்ணங்களே, என் மனையாளே மந்திரவாதியை, அன்பின் நீட்சியே, அழகிய மகிழியே, நகிழிய நண்பியே, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.
Comments
Post a Comment