2025 - அம்மா பிறந்த நாள் வாழ்த்து

அன்பின் அடைமொழியே!
பண்பின் பிரதிபலிப்பே!
என் வாழ்வின் வழிகாட்டியே!
எனை ஈன்ற என் தாயே!

தாவரவியல் உனது பணி,
இனிய புன்னகை உனது அணி,
தினமும் மலரும் உன் பாசம் தனி,
சிறக்கும் என்றும் உன் வாழ்வும் இனி!

எழுபது வருடம் மலர்ந்திட,
என்றும் நீ  நலம்வாழ்ந்து விளங்கிட.
மழைப்போல் உன் அன்பை பொழிந்திட,
வாழ்த்தும் வயதில்லை வணங்கினேன் அன்போடு.
 
                              புலவர் மைந்தன்

Comments

Popular posts from this blog

பதிமூன்று ஆண்டு மணநாள் வாழ்த்துக்கள்

வானவில்லே வணங்கிடும் நிறங்கள்!