ஒரு பொருள் இருவேறு பரிணாம கவிதைகள்: கவிநடை: ஆயிரம் தேவதை ஓய்வு நாள் இன்று, மலர்களும் மலர்ந்திட மறந்தன அன்று, பேதயாய் பெதும்பயாய் மங்கயாய் நின்று, ஆதலால் காதலால் என்னகம் சென்று, தற்காத்துத் தற்கொண்டாற் பேணியே நின்று, தகைசான்ற - சொற்காத்துச் சோர்விலா சுரிகுழல் நீ என்று, தென்றலின் எளிய நின் உளம் போல் அகன்று, கரைசேருமே என்வாழ்வு உன்னுடன் இணைந்து.. ஹைக்கூ: ஓராயிரம் தேவதை ஓய்வு நாள், ஈராயிரம் மலர்கள் மெய்மறந்த நாள், அது - என்னவளின் பிறந்த நாள்.. -- புலவர் மைந்தன்