என்னவளின் அன்பு! பிறந்தநாள் கவிதை.
ஒரு பொருள் இருவேறு பரிணாம கவிதைகள்:
கவிநடை:
ஆயிரம் தேவதை ஓய்வு நாள் இன்று,
மலர்களும் மலர்ந்திட மறந்தன அன்று,
பேதயாய் பெதும்பயாய் மங்கயாய் நின்று,
ஆதலால் காதலால் என்னகம் சென்று,
தற்காத்துத் தற்கொண்டாற் பேணியே நின்று,
தகைசான்ற -
சொற்காத்துச் சோர்விலா சுரிகுழல் நீ என்று,
தென்றலின் எளிய நின் உளம் போல் அகன்று,
கரைசேருமே என்வாழ்வு உன்னுடன் இணைந்து..
ஹைக்கூ:
ஓராயிரம் தேவதை ஓய்வு நாள்,
ஈராயிரம் மலர்கள் மெய்மறந்த நாள்,
அது - என்னவளின் பிறந்த நாள்..
-- புலவர் மைந்தன்
Comments
Post a Comment