பூங்காத்து சூடாச்சு ராசாவே நாளாச்சு
பூங்காத்து சூடாச்சு ராசாவே நாளாச்சு
__________________________________________
உலகாளும் அம்மனுக்கு ஊருசனம் கூடிநிற்க /
குஞ்சத்துக்காப் பஞ்சமுன்னு நாலுகுஞ்சம் நானுவச்சி /
திருவிழாக் கூட்டத்துல செல்லஇடி நானிடிக்க /
அதபாத்தக் கண்ணெல்லாம் கூச்சத்துல நாணிடுச்சி /
பதநீர குடிச்சிப்புட்டு பனங்கள்ளு என்றிடுவ/
வரப்புமேல நாநடந்தா
வம்பிழுத்துப் பாம்பென்ப/
வம்பிழுக்க நேரம்பாத்து வந்துஎன்ன சுத்திடுவ/
வம்பிழுக்க ஆளில்லயே வாராயோ என்மச்சா/
பூங்காத்துச் சூடாச்சு ராசாவே நாளாச்சு /
உன்னோட நினைவால உரங்காம ராப்போச்சி /
கயித்துக் கட்டில்படுக்கக் கூட கல்லுமுல்லா ஆயிடுச்சி /
மனசெல்லாம் ரணமாச்சி மச்சாஓ நெனப்பால /
நஞ்சபுஞ்ச இங்கிருந்து நல்லமழை இல்லாம/
முதலுக்கே மோசமுன்னு வட்டிக்கட்ட வழியில்லாம/
பிறதேசம் போனியலே புள்ளக்குட்டி இல்லாம/
நம்மக்குறை சிவணருஞ்சி மும்மாரிப் பொழிஞ்சிடுச்சு/
பூமித்தாய்ப் புண்ணியத்தில் மகசூலும் அதிகமாச்சு/
திரும்பியிங்க வந்துருங்க உஞ்சோடிக்குயில் காத்திருக்கு!
-- புலவர்மைந்தன்
Comments
Post a Comment