Posts

Showing posts from July, 2021

பூங்காத்து சூடாச்சு ராசாவே நாளாச்சு

Image
பூங்காத்து சூடாச்சு ராசாவே நாளாச்சு __________________________________________ உலகாளும் அம்மனுக்கு ஊருசனம் கூடிநிற்க / குஞ்சத்துக்காப் பஞ்சமுன்னு நாலுகுஞ்சம் நானுவச்சி / திருவிழாக் கூட்டத்துல செல்லஇடி நானிடிக்க / அதபாத்தக் கண்ணெல்லாம் கூச்சத்துல நாணிடுச்சி / பதநீர குடிச்சிப்புட்டு பனங்கள்ளு என்றிடுவ/ வரப்புமேல நாநடந்தா வம்பிழுத்துப் பாம்பென்ப/ வம்பிழுக்க நேரம்பாத்து வந்துஎன்ன சுத்திடுவ/ வம்பிழுக்க ஆளில்லயே வாராயோ என்மச்சா/ பூங்காத்துச் சூடாச்சு ராசாவே நாளாச்சு / உன்னோட நினைவால உரங்காம ராப்போச்சி / கயித்துக் கட்டில்படுக்கக் கூட கல்லுமுல்லா ஆயிடுச்சி / மனசெல்லாம் ரணமாச்சி மச்சாஓ நெனப்பால / நஞ்சபுஞ்ச இங்கிருந்து நல்லமழை இல்லாம/ முதலுக்கே மோசமுன்னு வட்டிக்கட்ட வழியில்லாம/ பிறதேசம் போனியலே புள்ளக்குட்டி இல்லாம/ நம்மக்குறை சிவணருஞ்சி மும்மாரிப் பொழிஞ்சிடுச்சு/ பூமித்தாய்ப் புண்ணியத்தில் மகசூலும் அதிகமாச்சு/ திரும்பியிங்க வந்துருங்க உஞ்சோடிக்குயில் காத்திருக்கு! -- புலவர்மைந்தன்